Advertisement

Sukkhi Dazzling Gold Plated Wedding Jewellery Austrian Diamond Choker Necklace Set Combo For Women (413CB1900



M.R.P : ₹2,995.00 | Sale Price : ₹299.00
You Save : ₹2,696.00


 

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் மத்திய சுகாதார துறை செயலளருமான கேசவ் தேசிராஜா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். முன்னாள் மத்திய சுகாதார துறை செயலாளர் கேசவ் தேசிராஜா இதய கோளாறு காரணமாக ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. 2015ல் இந்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற கேசவ் தேசிராஜா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட கேசவ் தேசிராஜா, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த கேசவ தேசிராஜா, சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகள் வழி பேரன் கேசவ தேசிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇