Advertisement

Enthone Womens Woven Light Pink Kora Muslin Saree with Blouse Piece (SZKOMU-73)



M.R.P : ₹5,699.00 | Sale Price : ₹1,375.00
You Save : ₹4,324.00 (76%)


 

காபூலில் இருந்து பறந்த அமெரிக்க ராணுவ விமானத்தில், நிறைமாத...

காபூலில் இருந்து பறந்த அமெரிக்க ராணுவ விமானத்தில், நிறைமாத கர்ப்பிணிக்கு பிறந்த ஆப்கன் குழந்தைக்கு அந்த விமானத்தின் குறியீட்டுப் பெயரான "ரீச்" என பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காபூலில் இருந்து மீட்கப்பட்டு அந்த விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, விமானம் ஜெர்மனியை அடைந்ததுடன், விமானத்தின் கார்கோ பகுதியில் வைத்து, ராணுவ மருத்துவர்களின் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது.

அதன் பின்னர் தாயும் சேயும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தங்களை மீட்ட சி-17 விமானத்தின் குறியீட்டுப் பெயரான ரீச் என்பதை தங்களது குழந்தைக்கும் சூட்ட அதன் பெற்றோர்கள் முடிவு செய்தனர். பின்னர், குழந்தை ரீச்-ம் பெற்றோரும் பாதுகாப்பாக அமெரிக்கா சென்றடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇