29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி

திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திகா, முதுநிலை பயற்சி மருத்துவர். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கு சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினர் வீட்டிலேயே வைத்து சீமந்தம் நடத்தியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கும் தொற்று உறுதியாகியுள்ளது. திருவாண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பெற்றவர், தொற்றின் தீவிரத்தால் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார்.

ஆனால் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதால், வானகரம் அப்போல்லோ மருத்துவனையில் இருந்து கடந்த 19-ம் தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]