Advertisement
577 காலியிடங்கள் அறிவிப்பு : டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (Employment Provident Fund Organisation) காலியாக உள்ள அமலாக்க அதிகாரி (Enforcement Officer/Accounts Officer), உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner) ஆகிய பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் : மொத்தம் 577 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு நிர்ணயித்துள்ள 8-வது நிலையிலான ஊதியம் வழங்கப்படும்

வயது வரம்பு: Enforcement Officer/Accounts Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். Assistant Provident Fund Commissioner பதவிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கு 75 சதவிகித விழுக்காடும், நேர்காணல் தேர்வுக்கு 25 சதவிகித விழுக்காட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு: பல பதில்கள் தேர்வு அம்ச வினாக்கள் (Multiple Choice Questions) கொண்ட கேள்களைக் கொண்டதாக எழுத்துத் தேர்வு இருக்கும். தேர்வு நேரம் : இரண்டு மணி நேரம். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3ல் 1 பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்

பாடத்திட்டம்: ஆங்கில அறிவு, இந்திய சுதந்திர போராட்டம், சமீப நிகழ்வு, இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம், கணக்கு பதிவியல் கோட்பாடு( General Accounting Principles), தொழிற்துறை தொடர்புகள் மற்றும் தொழிலாளர் சட்டம் (Industrial Relations & Labour Laws) பொதுஅறிவியல், மனக்கணக்கு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். கணக்கு பதிவியல் கோட்பாடு தவிர்த்து பார்த்தால், இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும், ஐஏஎஸ் , குரூப் 1, குரூப் 2, SSC போன்ற தேர்வுகளோடு அதிகம் ஒத்து போகிறது. எனவே, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பம் செய்வது எப்படிhttp://www.upsconline.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விளம்பர அறிவிக்கையை மேற்கண்ட இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST