கார் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம் மருத்துவமனையில் அனுமதி!!!

கார் விபத்தில் சிக்கிய பிக் பாஸ் பிரபலம் தற்போது மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ-வான பிக்பாஸ் 11-வது சீசனில் பங்கேற்ற பிரபல மாடலும் நடிகையுமான அர்ஷி கான், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டெல்லியில் உள்ள மாள்வியா நகர் அருகே விபத்து நடந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. “அர்ஷி காரில் இருந்த போது, டெல்லியில் உள்ள ஷிவாலிக் சாலை, மாளவியா நகர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இதையடுத்து நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று பிரபல ஆங்கில ஊடகத்தில் மேற்கோள் காட்டப்பட்டது. அர்ஷி கானின் குடும்பத்தினர் பின்னர் இதனை செய்தி இணையதளத்தில் உறுதிப்படுத்தினர். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11-வது சீசனில் பங்கேற்று, பின்னர் 14-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராகவும் பங்கேற்றார் அர்ஷி கான்.

  BreakingCinema   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]