Big excitement in the world of cinema: Dhanush-Meena marriage?

சினிமா உலகில் பெரும் பரபரப்பு: தனுஷ்-மீனாவுக்கு திருமணம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்த பின்னர், கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிய  உள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, தன்னுடைய கணவரை இழந்த நடிகை மீனாவும், தனுஷும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திரைப்பட விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கொளுத்தி போட்ட விஷயத்தால் பலர் கொந்தளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

தொடர்ந்து பேசியவர், மீனா திரையுலகில் 40 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு சமீபத்தில் விழா எடுக்கப்பட்டது. அதில் ரஜினி கலந்து கொண்டார். ரஜினியும் மீனாவும் அப்பா - மகள் போல் நல்ல ஒரு அண்டர்ஸ்டாண்டில் இருக்கும் நிலையில், தனுஷும் மீனாவும் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? இப்படி பரவும் தகவல்களில் உண்மை இருப்பது போல் தெரியவில்லை என அவரே தெரிவித்துள்ளார்.

மீனா - தனுஷ் பற்றி பட்டும் படாமல் பயில்வான் ரங்கநாதன் பேசு இருந்தாலும், இது போன்ற விஷயங்களை எவ்வித ஆதாரமும் இன்றி பேசுவதும், விவாதிப்பதும் மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்று என நெட்டிசன்கள் மற்றும் மீனா -  தனுஷின் ரசிகர்கள் பொங்கி எழுந்து வருகிறார்கள். அதேபோல் பாடி டிமாண்ட் பற்றி பயவான் ரங்கநாதன் பேசியதற்கும் பலர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.