Chance of rain for the next 5 days: Meteorological Department Information!!

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!!

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர தயங்குகின்றனர். வெப்பம் அதிகரித்தாலும், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.