Earthquake - Turkey, Syria death toll so far 5,000 officially announced

நிலநடுக்கம் - துருக்கி, சிரியாவில் இதுவரை 5,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு

துருக்கி: துருக்கி, சிரியாவில் இதுவரை 5,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல ஆயிரம் வீடுகள்  இடிந்துவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் வீடு இல்லாமல் கடும் குளிரில் வாடி வருகின்றனர். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாதம் அவசர நிலை அமலில் இருக்கும் என துருக்கி அதிபர் அறிவித்தார்.

நிலநடுக்கம் பாதித்த பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் மீட்புப் பணியில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. உறைய வைக்கும் நள்ளிரவு குளிரில் வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றி உயிருடன் இருப்போரை காப்பாற்ற முயற்சித்து வருகின்றனர்.

மேலும் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,000-ஐ தாண்டும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக உயிரிழப்பு 8 மடங்கு அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

துருக்கியில் இதற்கு முன் 1999-ல் 17,500 பேரை பலி கொண்ட நிலநடுக்கத்தை விட தற்போதைய நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.