டவ்தே புயல் எதிரொலியாக வெள்ள அபாய எச்சரிக்கை!  குழந்தை உள்பட 2 பேர் பலி!

டவ்தே புயல் எதிரொலியாக வெள்ள அபாய எச்சரிக்கை! குழந்தை உள்பட 2 பேர் பலி!

டவ்தே புயல் எதிரொலியாக கனமழையால் குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் கடல் உள்வாங்கியது. வீடு இடிந்து குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர். அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக தமிழகத்தில் குமரி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நேற்று ‘‘ரெட் அலர்ட்’’ விடுக்கப்பட்டு இருந்தது. குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டியது. இதன்காரணமாக நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.01 அடியாக இருந்தது. அணைக்கு 1532 கன அடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை, முக்கடல் என அனைத்து அணைகளிலும் சேர்த்து 4 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுப்பணித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்