Advertisement
மனித மூளைக்குள் சிப்... எலான் மஸ்க் ஆராய்ச்சிக்கு அனுமதி அளித்தது FDA!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின், மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதி கிடைத்துள்ளது. இதனை அடுத்து, எலோன் மஸ்க் விரைவில் மனித மூளையில் ஸ்மார்ட் சிப்களை பொருத்தி வராலாற்று சிறப்பு மிக்க ஆராய்ச்சியைத் தொடங்கலாம். மனித மூளையில் பொருத்தப்பட்ட நியூராலிங்க் சாதனத்தின் தாக்கத்தை எலான் மஸ்க் இப்போது ஆய்வு செய்ய முடியும். "எங்கள் முதல்-மனித மருத்துவ ஆய்வைத் தொடங்க FDA இன் ஒப்புதலைப் பெற்றுள்ளோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று நியூராலிங்க் ட்வீட் செய்துள்ளார்.

"இது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நியூராலிங்க் குழு மேற்கொண்ட பணியின் விளைவாகும். மேலும் ஒரு நாள் எங்கள் தொழில்நுட்பம் பலருக்கு உதவிடும் வகையில் வளர்ச்சி பெறுவதற்கான ஒரு முக்கியமான முதல் படியாகும்," என்று நுயூராலிங்க் நிறுவனம் மேலும் கூறியது.

ஆராய்ச்சியில், குரங்குகளின் மூளையில் பொருத்தப்பட்ட சிப்கள் சிறப்பாக வேலை செய்துள்ளன. சில குரங்குகள் கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தியும் இருக்கின்றன. இது தொடர்பான ஆய்வறிக்கைகளை நியூராலிங்க் நிறுவனம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்து, அடுத்தக்கட்டமாக மனித உடலில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டது.

FDA ஒப்புதலைப் பெற்றவுடன், மஸ்க் நியூராலிங்க் குழுவை வாழ்த்தி ட்வீட் செய்தார். மேலும், மருத்துவ சோதனைக்கான ஆட்சேர்ப்பு இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், இது தொடர்பான கூடுதல் தகவல்களை விரைவில் அறிவிக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில், பாதுகாப்பு அபாயங்கள் தொடர்பாக மனித மூளையில் ஒரு சிப்பை பொருத்துவதற்கான நியூராலிங்கின் முயற்சியை FDA நிராகரித்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், நியூராலிங்கின் சாதனம் மனித சோதனைகளுக்குத் தயாராக இருப்பதாகவும், பன்றிகள் மற்றும் குரங்குகள் மீது பரிசோதனை செய்த பின், மனித மூளையில் பொருத்தி பரிசோதனை செய்வதை எதிர்நோக்கியிருப்பதாகவும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

இருப்பினும், மூளை-கணினி இடைமுகத்தை மனிதர்களுக்குள் முதன்முதலில் பொருத்தியது Musk's Neuralink நிறுவனம் அல்ல. நியூராலிங்க் போட்டியாளரான சின்க்ரான் ( Synchron), கடந்த ஆண்டு மே மாதம் வெறும் எண்ணங்களைப் பயன்படுத்தி, டிஜிட்டல் சாதனங்களை ஹேண்ட்ஸ் ஃப்ரீயாகக் கட்டுப்படுத்த, அமெரிக்காவில் கடுமையாக முடங்கிப்போயிருந்த ஆறு நோயாளிகளுக்கு மனித சோதனைகளைத் தொடங்கியது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட சின்க்ரான் ஒரு எண்டோவாஸ்குலர் மூளை-கணினி இன்டர்ஃபேஸ் (BCI) நிறுவனமாகும், இது நியூராலிங்குடன் போட்டியிடுகிறது. இது முடங்கியவர்கள் தங்கள் மூளை செயல்பாடுகளின் மூலம் கணினிகள் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST