அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச கபசுர குடிநீர்! மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது தலைமை நீதிபதி

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக கபசுர குடிநீர் இலவசமாக வழங்க வேண்டுமென்று திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கபசுர குடிநீர் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது என்பதால் மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் வினியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இது மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது எனவும், கபசுர குடிநீரின் நோய் எதிர்ப்பு திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]