ஆர்.ஜே.பாலாஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

ஆர் ஜே பாலாஜி ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாகத்தான் தனது பயணத்தை தொடங்கினார் ஹலோ கோயம்புத்தூர் என்ற பெயரில் ஆர்ஜே பாலாஜி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதன் பிறகு சென்னையில் உள்ள பிக் எப்.ஃஎம்மில் சேர்ந்த ஆர்ஜே பாலாஜி தொகுத்து வழங்கிய கிராஸ் டாக் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்தது இந்த நிகழ்ச்சி என்னவென்றால் தெரியாத ஒருவருக்கு போன் செய்து கலாய்க்க கூடிய ஒரு நிகழ்ச்சி இதை அருமையாக நடத்தி வெற்றியும் அடைந்தார்.

அதன்பிறகு திரைத்துறையில் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கிய ஆர்ஜே பாலாஜி எல்கேஜி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார் இந்த படம் இன்றைய அரசியல் மையப்படுத்தி அரசியலை காமெடியாக கேலி செய்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தார் இந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்து நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

திரைப்படத்தில் மட்டுமல்ல அவ்வபோது பொது சேவையில் ஈடுபடும் ஆர்வம் கொண்டவர், சென்னையில் வெள்ளம் வந்த பொழுது இவரது பங்களிப்பு மிகப்பெரியது. சென்னை வெள்ளத்தில் நேரடியாக மக்களிடம் சென்று பல உதவிகளை செய்தார்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]