டவ்-தே புயல் காரணமாக 7 தமிழக மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

டவ்-தே புயல் காரணமாக 7 தமிழக மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

டவ்-தே புயல் காரணமாக கேரளா, அதை ஒட்டிய 7 தமிழக மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், கன முதல் மிக கன மழை பெய்யலாம். சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.நீலகிரி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஏழு மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு, இதே சூழல் நிலவும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில், இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும்.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்