கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்! பிசிசிஐ துணைத்தலைவர் ராஜூவ் சுக்லா அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்! பிசிசிஐ துணைத்தலைவர் ராஜூவ் சுக்லா அறிவிப்பு

60 போட்டிகள் கொண்ட 14வது ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது கொல்கத்தா , ஹைதராபாத், சென்னை, டெல்லி அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியனதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜூவ் சுக்லா அறிவித்துள்ளார்.

புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா உறுதியானது.

மேலும் சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன், பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்