அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு - முதல்வர்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு - முதல்வர்

தலைமை செயலகத்தில் காலை 9:15 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. கொரோனா, பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்