அமெரிக்கர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது - அமெரிக்கா

அமெரிக்கர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது - அமெரிக்கா

இந்தியாவில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருவதால், அமெரிக்கா்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம்; அங்கு தங்கியிருப்பவா்கள் விரைவில் வெளியேறுவது பாதுகாப்பானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அங்கு சிகிச்சை பெறுவது கடினமாக உள்ளது. எனவே, அமெரிக்கா்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; இந்தியாவில் இருப்பவா்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பிவிடுவது நல்லது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் அமெரிக்கா்களின் குடும்பத்தினா் விருப்பத்தின்பேரில் அமெரிக்காவுக்கு வந்துவிடலாம். அமெரிக்க குடிமக்களுக்கு உதவுவதற்காக, தில்லியில் உள்ள அமெரிக்க தூதகரம், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள துணைத் தூதரகங்கள் தொடா்ந்து இயங்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்