பிரபல நடிகைக்கு கல்லீரல் பாதிப்பு! தானம் வழங்கும் ரசிகர்!

காதலுக்கு மரியாதை’, ‘காற்று வெளியிடை’, ‘அலைபாயுதே’, ‘உள்ளம் கேட்குமே’, ‘கிரீடம்’, ‘மாமனிதன்’ உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், 300க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்திருப்பவர் கே.பி.ஏ.சி.லலிதா.

இவர் இயக்குனர் பரதனின் மனைவி. 73 வயதான லலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

லலிதாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், கல்லீரல் தானம் கோரி அவரது மகள் குட்டி சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து லலிதாவின் தீவிர ரசிகரும், கேரள நாடகக் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய முன் வந்துள்ளேன். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தகவல் சொல்லியிருக்கிறேன். எனக்கு 54 வயது. லலிதாவுக்கும், எனக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பதால் இந்த முடிவெடுத்தேன். எனக்கு மதுப்பழக்கமோ, புகைப்பழக்கமோ கிடையாது. அதனால் கண்டிப்பாக எனது கல்லீரல் அவருக்குப் பொருந்தும்’ என்றார்.

  BreakingCinema   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]