தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்றுடன் விடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் வரும் 25-ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.