நவம்பர் 1ம் தேதி தமிழ்நாட்டுடன் குமரி இணைந்த தினம்.
இதனை முன்னிட்டு நவம்பர் 1 திங்கட்கிழமை குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 13ம் தேதி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் குமரி மாவட்ட தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் ஆகியவை அரசின் அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள் :
  BreakingNews   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇