Shocking information for those who were to buy gold today

இன்று தங்கம் வாங்க இருந்தவர்களுக்கு அதிர்ச்சி தகவல்

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4835.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து  ரூபாய் 38680.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5234.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41872.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 67.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67500.00 எனவும் விற்பனையாகி வருகிறது