Advertisement
சற்றுமுன் பரபரப்பு - நாளை முதல் டீ கடைகளுக்கு அனுமதி இல்லை மேலும் பல புதிய கூடுததல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

நாளை முதல் கூடுததல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 மணி வரை செயல்பட்டு வந்த காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படவே அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளுக்கான தடை உத்தரவு அப்படியே தொடரும். மேலும் தேனீர் கடைகளுக்கு அனுமதி இல்லை.

புதிய கட்டுப்பாடுகள்

1.தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள்,
இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும்
குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க
அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள்
அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை
மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில்
50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட
வேண்டும்.

2. பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல
செயல்படும்.

3.ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல்
அனுமதிக்கப்படும்.

4. பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு,
காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில்
வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம்
பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

5. காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள்
நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில்,
தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை
கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

6. தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட
அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க
அனுமதி இல்லை.

7.மின் வணிக நிறுவனங்கள்(ந-உடிஅஅநசஉந) மதியம் 02.00
மணி முதல் மாலை 06.00 மணி முடிய செயல்பட
அனுமதிக்கப்படும்.

இ-பதிவு முறை

1. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு
வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும்.

2.அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின்
இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை
போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும்
மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இபதிவுமுறை 17.05.2021 காலை 6 மணி முதல் கட்டாயமாக்கப்படும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST