ஸ்ரீ அபிராமி ஐரோப்பிய பனிச்சறுக்கு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியா வில் நேற்று இரவு நடைபெற்ற ஐரோப்பிய பனிச்சறுக்கு போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இளம் நட்சத்திர வீராங்கனை ஸ்ரீ அபிராமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.  இப்போட்டியில் மொத்தம் 16 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆசிய மண்டல சார்பில் ஒரே வீராங்கனை இவர் ஆவார். ஐந்து சுற்றுகள் அடங்கிய பனி சறுக்கு போட்டியில் ஸ்ரீ அபிராமி 26.55 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

  Silvermedal   malaysia   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]