இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே, தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை என செய்தி வெளியாகி உள்ள நிலையில், ராஜபக்சே குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, அவசர அமைச்சரவை கூட்டம் அதிபர் அலுவலகத்தில் இல்லாமல், பிரதமர் அலுவலகத்தில் நடைபெறுவதாக தகவல். தற்போதைய அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து எட்டியவுடன் புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்? என எதிர்பார்க்கப்படுகிறது.