அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கொடுத்த சூப்பர் ஸ்டார் நாளை சென்னை திரும்புகிறார்

அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கொடுத்த சூப்பர் ஸ்டார் நாளை சென்னை திரும்புகிறார்

கொரோனா இரண்டாவது அலை காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது ஹைத்ராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.இதனால் நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இன்னும் 20 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி உள்ளதால் அதனை கொல்கத்தாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

வரும் தீபாவளிக்கு அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்