தேன்மொழி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்

தேன்மொழி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்

விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல தொடரின் மற்றொரு நடிகர் உயிரிழந்திருப்பது மேலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தேன்மொழி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் காலமாகி இருக்கிறார். இந்த சம்பவம் விஜய் டிவி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சீரியலில் ஜாக்லினின் தந்தையாகவும் ஊராட்சி மன்ற தலைவராகவும் சுப்பையா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் குட்டி ரமேஷ். இவர் ஏற்கனவே பல்வேறு சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்