தளபதியின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி!!!

தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக திகழும் விஜய்சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், அனபெல்லா சேதுபதி படங்கள் வெளியாகின. அடுத்ததாக இவர் நடிப்பில் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர் படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கமர்ஷியல் காமெடி ஹிட் படங்களை தந்த இயக்குனர் பொன்ராம இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் அனுகீர்த்தி வாஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி போலீசாக நடிக்கும் இந்தப்படம் ஹியூமர் கலந்த நகைச்சுவை படமாக உருவாக உள்ளதாக இயக்குனர் பொன்ராம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் உலக அளவில் செம வைரலான 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு விஜய் சேதுபதி நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  VijaySethupathi   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]