ரூ.11 கோடி கொரோனா நிவாரண நிதி திரட்டிய விராட் கோலி - அனுஷ்கா சர்மா!

ரூ.11 கோடி கொரோனா நிவாரண நிதி திரட்டிய விராட் கோலி - அனுஷ்கா சர்மா!

விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து கிராவுட் ஃபண்டிங் தளம் மூலமாக 11,39,11,820 ரூபாயை திரட்டி உள்ளனர். இதனை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“எங்களது எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பலமடங்கு கூடுதலாக நிதி திரட்டப்பட்டுள்ளது. நிதி அளித்த, இந்த செய்தியை பகிர்ந்த ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றி. நாம் எல்லோரும் இந்த இக்கட்டான சூழலில் ஒன்றாக இருந்து இதனை சமாளிப்போம்” என கோலி கேப்ஷன் கொடுத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்