தளபதி 65 படத்தின் முதல் பார்வை ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டது ஏன்? தமிழ் மீது பற்று கொண்ட ரசிகர்கள் வருத்தம்

தளபதி பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜயின் 65வது படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது, படத்தின் பெயர் BEAST என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் பார்வை தமிழில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டது தமிழ் மீது பற்று கொண்ட விஜய் ரசிகர்கள் சிறிது வருத்தம் தெரிவித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய பட நிறுவனமே தமிழை தவிர்ப்பது வருத்தமளிக்கிறது. தமிழ் படமான விஜய்யின் 65வது படத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் படத்தின் முதல் பார்வை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வரும் காலங்களில் தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்குமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]