பாடகி பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்த இசையமைப்பாளர்...

பாடகி பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகர்கள் கார்த்தி மற்றும் விஷால் வருகை

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Deeply saddened by the passing away of Bhavadharini!

பவதாரிணியின் மறைவு மிகுந்த வருத்தம்...

பவதாரிணியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது!

இளையராஜாவை தொலைபேசியில் அழைத்து |

ஆறுதல் தெரிவித்தேன் -நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

British Oscar nominated actor Tom...

பிரிட்டிஷ் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட...

பிரிட்டிஷ் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் டாம் வில்கின்சன், தி ஃபுல் மான்டியில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், 75 வயதில்   நேற்று காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிரபல மலையாளத் திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான அச்சாணி ரவி காலமானார்

பிரபல மலையாளத் திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான அச்சானி ரவி இன்று காலமானார். அவருக்கு வயது 90. மலையாள திரையுலக பிரபலங்கள் அச்சானி ரவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள திரையுலகில் தனது ஆளுமையை ஆழமாக பதித்தவர் அச்சானி ரவி. 70கலில் ஜெனரல் பிக்சர்ஸ் என்ற பெயரில் மலையாள திரைப்படங்களைத் தயாரிக்க துவங்கிய ரவிந்திரநாத் நாயர், தனது அச்சானி என்கிற படம் மூலமாக மலையாள திரையுலகினரை முழுக்கவே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தார். வசூல் ரீதியாகவும் அச்சானி, மலையாள திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அது முதல் அச்சானி ரவி என்று ரசிகர்கள், திரையுலகினரால் அழைக்கப்பட்டு வந்தார். தம்பு, காஞ்சனா சீதா, கும்மட்டி,எஸ்தப்பன், பொக்குவெயில், எலிப்பத்தையம், மஞ்சு என இன்றளவும் மலையாள ரசிகர்கள் கொண்டாடும் கால பொக்கிஷமாக பல திரைப்படங்களைத் தயாரித்துள்ள ரவி, தனது தயாரிப்புத் துறையில், சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகளை இதுவரையில் 20 முறை பெற்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை அம்மாநில அரசு கொடுத்து கெளரவித்துள்ளது. தனது சொந்த ஊரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நூலகம் ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ள ரவி, சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருந்தார். தரமான முந்திரிகளை ஏற்றுமதி செய்து வந்து, சிறந்த தொழிலதிபராகவும் தன்னை நிரூபித்த அச்சானி ரசி, தனது 90வது வயதில், கடந்த ஜூலை 8ம் தேதி கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பழம்பெரும் மலையாள நடிகர் சி.வி.தேவ் காலமானார்

பழம்பெரும் மலையாள நடிகர் சி.வி.தேவ் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது 83 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த தேவ், உடல்நல குறைவு காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் தேவ்வுக்கு ஜானகி என்ற மனைவியும், சுகன்யா, சுகவ்யா என்ற இரண்டு மகள்களும் சுகாத்மஜன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், வயது மூப்பு, மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக மரணமடைந்துள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
39 வயதில் பிரபல பாடகர் மாரடைப்பால் மரணம் சோகத்தில் ரசிகர்கள்

தெலுங்கானா மாநில கிடங்கு கழக தலைவரும், நாட்டுப்புற பாடகருமான சாய் சந்த் மாரடைப்பால் மரணமடைந்தது அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நாட்டுப்புற பாடகரும், தெலுங்கானா மாநில கிடங்கு கழக தலைவருமான சாய் சந்த் மாரடைப்பால் மரணமடைந்தார். சாய் சந்த் தனது குடும்பத்தினருடன் கர்னூல் மாவட்டம் கருகொண்டாவில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு புதன்கிழமை மாலை குடும்பத்தினருடன் சென்றார். நள்ளிரவில், உடல்நிலை சரியில்லாமல் போனதால், உடனடியாக கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் அவரை கச்சிபௌலியில் உள்ள கேர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் , அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 39. மறைந்த பாடகர் சாய் சந்துக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

சாய் சந்தின் மறைவுக்கு பிஆர்எஸ் தலைவரும், தெலுங்கானா மாநில முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ள அவர், சாய்சந்த் இவ்வளவு இளம் வயதில் மரணமடைந்தது தன்னை மிகவும் பாதித்ததாக கூறியுள்ளார். தெலுங்கானா மாநில போராட்டத்தின் ஒரு பகுதியாக கலாச்சார இயக்கத்தில் சாய்சந்தின் பங்கு விலைமதிப்பற்றது எனவும் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

சாய் சந்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். துந்தம் நிகழ்ச்சி மூலம் பாடல்கள் பாடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார் சாய் சந்த். அவரின் இந்த திடீர் மறைவு அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

தென்னிந்திய மொழிகளில் தன் பண்பட்ட நடிப்பால் முத்திரை பதித்தவர் நடிகர் சரத்பாபு; அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரைப் பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

- அண்ணாமலை

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பருத்திவீரன் புகழ் செவ்வாழை ராசு காலமானார்

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் செவ்வாழை ராசு( வயது 70)  உடல் நலக்குறைவால் காலமானார். கிழக்கு சீமையிலே, மைனா உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் செவ்வாழை ராசு நடித்துள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்திக் இடம் தலையில் கொட்டுவாங்கி நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!!  நடிகர் சரத்பாபு நலமுடன் உள்ளார் குடும்பத்தினர் அறிவிப்பு

பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

80களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் சரத்பாபு தற்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து மேலும் புகழ் பெற்றார்.

இவர் முள்ளும் மலரும், அண்ணாமலை, வேலைக்காரன், முத்து என ரஜினியுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இதனால் ரசிகர்களால் சரத்பாபு நன்கு அறியப்பட்டார். 1974இல் பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார்.

 
அதைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் சரத்பாபு குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 71 வயதாகும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் சரத்பாபு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக, நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டார்.

இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இந்நிலையில், அவரது குடும்பத்தினர், நடிகர் சரத்பாபு உடல்நலம் தேறி வருவதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 14 )   NEXT |  LAST