Chance of rain in Tamil Nadu for next 3 hours!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் (நவம்பர்) தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

All 18 districts should be ready.. Heavy rain is going to pour!!

18 மாவட்டங்களும் ரெடியா இருங்க.. கொட்டப்போகுது பெருமழை!!

நீலகிரி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி வருகிறது.. இதனால், மாநிலம் முழுதும், பல்வேறு இடங்களில், மிதமான அளவுக்கு மழை பெய்து வருகிறது.. இதனிடையே, மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கினர்

சென்னையில், பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாமல், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பெரும் தவிப்பிற்கு ஆளாகிவிட்டனர். இன்னும் நிவாரண பணிகளும், மீட்பு பணிகளும் முழுமையாக முடியவில்லை.. கடந்த 2 நாட்களாகவே மழை ஓரளவு ஓய்ந்த நிலையில், மெல்ல மெல்ல சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

 

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிரப்பதாக சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது. குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை , ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது..

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் வாரம் முழுவதுமே பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மீண்டும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அந்த அறிவிப்பில்,"தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வரும் 10, 11-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 12, 13, 14, 15-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றைய தினம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

டிசம்பர் 8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் பில்லூர் அணை ஆகிய இடங்களில் 9 செ.மீ., நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடும் பனி: சென்னையை பொறுத்தவரை, இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது... இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். புறநகரில் காலை முதலே வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. மேலும், காலை முதல் கடும் பனிமூட்டத்துடன் மிதமான மழைபெய்து வந்ததால் குளிர் அதிகரித்து காணப்பட்டது. தற்போது, வளசரவாக்கம், போரூர், வடபழனி பகுதிகளில் லேசாக தூறல் பெய்து வருகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Chance of moderate rain in Tamil Nadu for the next 7 days!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

சென்னை:தமிழகத்தில் இன்று(டிச.,07) முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் நாளை மறுநாள் (டிச.,09) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(டிச.,07) முதல் அடுத்த 7 நாட்களுக்குஇடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Chance of rain in 8 districts!!

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக முதற்கட்டமாக 1500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு மதகுகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

BREAKING: Migjam storm echoes next shock warning

BREAKING: மிக்ஜாம் புயல் எதிரொலி அடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை வந்தது

மிக்ஜாம் புயல் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் மீண்டும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் இன்று இரவு வரை கனமழை பெய்யும். ஒருவேளை புயல் மெதுவாக நகர்ந்தால், நாளை காலை வரை கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Previ is approaching.. Red alert has come.. Warning to the people of these 5 districts.. Heavy rain!

நெருங்கும் புரேவி.. வந்தாச்சு ரெட் அலர்ட்.. இந்த 5 மாவட்ட மக்களுக்கும் வார்னிங்.. செம மழையாம்!

சென்னை: தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. புரேவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.இன்னும் நிவர் புயலின் தாக்கமே தமிழகத்தில் இருந்து நீங்கவில்லை.. கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த தீவிரமான கனமழையானது, மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.அதன் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வருகிறது.. இந்நிலையில், நிவர் புயல் கடந்த தினமே மற்றொரு புயல் வர விருப்பதாக கூறப்பட்டது. அதன்படி, வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் தற்போது ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளதுதெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது... அது மேலும் வலுப்பெற்று புரேவி புயலாக மாறும் என்றும், அந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து நாகப்பட்டினம் அருகே தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி, மன்னார் வளைகுடா வழியாக திருநெல்வேலி மாவட்டம் வழியாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஇந்த புயல் தமிழகத்தை நோக்கி வருவதால், டிசம்பர் 2ம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.. பொதுவாக, இந்த ரெட் அலர்ட் என்பது, மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை தரப்படும்.. அதாவது, போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்றஎச்சரிக்கைகள் விடப்படும்.. அந்த வகையில் மேற்கூறிய இந்த 5 மாவட்ட மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Tamil Nadu Rain: National Disaster Response Force rushed to 8 districts

தமிழ்நாடுகனமழை: 8 மாவட்டங்களுக்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை

தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் எட்டு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, கண்காணிப்பு பணிகளுக்கென மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளை மேற்பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனமாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன. புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் டிஎன்ஸ்மார்ட் செயலி மூலமாகவும், டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (29.11.2023) முதல் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் 5.23 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று (30.11.2023) காலை 8.00 மணி முதல் புழல் நீர்த்தேக்கத்திலிருந்து 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Rain in 14 districts of Tamil Nadu for next 3 hours

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இந்த சூழலில், வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், தொடர்ச்சியாக புயலாக உருமாறவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு, இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை உட்பட 14 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Migjam storm formed in Bay of Bengal: Heavy rain likely to continue in Tamil Nadu!!

வங்கக்கடலில் உருவானது மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டில் கனமழை நீடிக்க வாய்ப்பு!!

தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது தீவிரமடைந்து புயலாக மாறும் என்றும், இந்தப் புயலுக்கு ‘மிக்ஜாம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக். 21-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போதும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக் கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக் கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழ்நாட்டின் ஊடாகச் செல்வதால் வடதமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவாலாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துக் கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நேற்று புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம், வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் வியாழக்கிழமை (நவ. 29) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இந்தப் புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரை செய்த ‘மிக்ஜாம்’ என்ற பெயர் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழ்நாட்டிற்கு வருமா அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா என்பது இன்னும் இரண்டு நாள்களில் துல்லியமாகத் தெரியவரும் என்று சென்னை வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நாளை தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 116 )   NEXT |  LAST