>>  
உலக சேமிப்பு நாள் இன்று! வீட்டையும் நாட்டையும் காக்கும் சேமிப்பு,சிக்கனம்!!

சேமிப்பு, சிக்கனம் என்னும் பகுத்தறிவுகளெல்லாம் தனிப்பட்ட முறையில் நம் வாழ்க்கையோடு நிறுத்திவிடாமல், உலகில் தட்டுப்பாடுகளோடு இருப்பவர்களின் நிலைப்பாடுகளை அறிந்து தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முதன்மைப்படுத்தப் படவேண்டியது அவசியம்…. வாழ்வில் எப்பொழுதுமே சிக்கனத்தை முதன்மையானதாக வைத்திருக்க வேண்டும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் நீர், நிலம், உணவு, எரிபொருள், மின்சாரம் என சிறுசிறு விஷயங்களில் நமது சிக்கனத்தை காண்பிப்போமே!. நம் சிக்கனம், உலகத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்…. ஆம், “சிக்கனம் வீட்டையும், சேமிப்பு நாட்டையும் காக்கும்”

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇