Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>  
புரட்சித் தலைவருக்கு சிறுநீரகம் தானம் வழங்கி உயிரை காத்த லீலாவதி காலமானார்


1984ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவரது அண்ணன் சக்கரபாணியின் மகள் லீலாவதி தனது சித்தப்பாவான எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தேவைப்படுவதை அறிந்த அவர், உடனடியாக தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். இதை அறிந்த எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் மகள் லீலாவதியை ராமாபுரம் தோட்டத்திற்கு அழைத்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லீலாவதி சென்னையில் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். அவருடைய மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇