>>  
பத்ம பூசண், கலைமாமணி விருது பெற்ற தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி உடல்நலக்குறைவால் காலமானார்

இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞர் ஆவார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமசுகிருத மொழியில் முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர். டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.


இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த ஆர். நாகசாமி, 1959 முதல் 1963 முடிய சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக (curator) பணியில் சேர்ந்தார். 1963 முதல் 1966 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966 முதல் 1988 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக இருந்தவர்.


இவரது பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2018 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதை வழங்கியது.

சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்த ஆய்வுக்காக கலைமாமணி விருது பெற்றார்.

இன்று 23 January 2022 உடல்நலக்குறைவால் தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி காலமானார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇