Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>  
 விவாகரத்தை அறிவித்த விஜய் சேதுபதி பட நாயகி

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் தமிழிலும் அறிமுகமாகியிருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் கொண்டார். நிஹாரிகாவின் கணவர் சைதன்யா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே நிஹாரிகா மற்றும் சைதன்யா இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், நடிகை நிஹாரிகா பிரிவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "நானும், சைதன்யாவும் ஒருமனதாக பிரிய முடிவு எடுத்துள்ளோம். ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. புதிய வாழ்க்கையை ஏற்றுகொள்ள தேவையான ப்ரைவசியை கொடுங்கள். புரிந்து கொண்டதற்கு நன்றி." எனத் தெரிவித்துள்ளார். நடிகை நிஹாரிகாவின் விவாகரத்து குறித்த அறிவிப்பு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇