சிரோடைப் II என்ற வகை டெங்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது - ஒன்றிய அரசு எச்சரிக்கை

ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், கேரளா, உத்தர பிரதேசம், மராட்டியம், ஒடிச, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சிரோடைப் II டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் 10 ஆம் தேதிகளில் ஒன்றிய சுகாதாரத்துறை இது குறித்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சரவை செயலா் ராஜீவ் கெளபா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. டெங்கு பாதிப்பை முன்கூட்டியே கண்டறிதல், காய்ச்சல் உதவி முகாம்கள் நடத்துதல், போதுமான அளவில் பரிசோதனைக் கருவிகள், மருந்துகளை இருப்புவைத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் கணக்கெடுப்பு, தொடா்பு அறிதல், ரத்த வங்கிகளில் போதுமான அளவு ரத்தம் இருப்பதை உறுதிப்படுத்துதல் தொடா்பான பணிகளுக்காக குழுக்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇