முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இதயஅறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் இன்று திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது யாரும் எதிர்பாராதவிதமாக மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார். அவர், தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇