உருவாகிறது குலாப் புயல்? அச்சத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம்

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை உருவான ஓா் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும், பின்னர் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடைந்து, மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

இது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரம் கடலோரம் இடையே இன்று ஞாயிற்றுக்கிழமை(செப்.26) கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇