இதயக்குழல் நோய்களை எவ்வாறு தடுப்பது? மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்! முதல் உதவி எவ்வாறு செய்வது!

நடத்தை ஆபத்துக் காரணிகளை சரிசெய்வதன் மூலம் பல இதயக்குழல் நோய்களைத் தடுக்க முடியும்.

ஆரோக்கிய உணவை உண்ணவும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்பற்ற இறைச்சிகள், மீன் போன்ற உணவுகளால் உங்கள் தினசரி உணவைச் செறிவூட்டுங்கள். விலங்கு கொழுப்பு, சீனி மற்றும் உப்பைக் கட்டுப்படுத்துங்கள்.

புகைக்காதீர். புகைப்பவர் அருகில் நிற்காதீர்.

தொடர்ந்து உடல் பயிற்சி செய்யவும். இதய துடிப்பு விகிதத்தையும் சுவாசத்தையும் அதிகரிக்க தினமும் 30 நிமிடம் நடக்கவும். உடல் செயல்பாடு நோய் ஆபத்தைக் குறைக்கும்.

மிகை இரத்த அழுத்தம்: மாரடைப்பை உண்டாக்கும்
இரத்த சர்க்கரை அளவு: நீரிழிவு இருந்தால்
இரத்தக் கொலஸ்ட்ரால்: மிகை கொலஸ்ட்ரால் மாரடைப்பை உண்டாக்கும்
மருந்துகளைக் கவனமாக உட்கொள்ளவும்: மருத்துவர் ஆலோசனைப்படி தொடர்ந்து உட்கொள்ளவும்.

உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்: உங்கள் நலத்துக்காகவும் உங்கள் குடும்ப நலத்துக்காகவும் நீங்கள் செய்வது குறித்துப் பெருமைப்படவும்.

மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி அறியவும்:

சில நிமிடங்கள் நீடிக்கும் நெஞ்சின் நடுவில் மெல்லிய வலி அல்லது அசௌகரியம்
ஒரு அல்லது இரு புயங்கள், முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றில் வலி அல்லது அசௌகரியம்
மூச்சடைப்பு , குளிர் வியர்வை, குமட்டல், கிறக்கம்

முதல் உதவி எவ்வாறு செய்வது!

நோயாளியை உட்கார வைக்கவும் அல்லது அவருக்கு மிகவும் ஏற்ற நிலையில் வைக்கவும்
இறுகிய ஆடைகளைத் தளர்த்தவும்
நைட்ரோகிளிசரின் போன்ற இதய பிரச்சினைகளுக்கான நெஞ்சுவலி மருந்து உட்கொண்டு வந்தால் அதை உட்கொள்ள உதவவும்.
ஓய்வில் அல்லது நைட்ரோ கிளிசரின் உட்கொண்டு 3 நிமிடங்களில் வலி நிற்கவில்லை என்றால் அவசர மருத்துவ உதவியை நாடவும்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇