இந்த உலகில் மனிதர்களின் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்காக  வினோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.
அந்தவகையில் தேனி மாவட்டம் காமராஜபுரம் பகுதியில் வசித்து வரும் குமரேசன் குடும்பத்தினர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் சுற்றிய பெண் நாயை அரவணைத்து அதற்கு சில்க் சுமிதா என பெயரிட்டு வளர்த்து வந்தனர். சமீபத்தில் இந்த நாய் கருவுற்றதையடுத்து தனது வீட்டில் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி உறவினர்கள் அனைவரையும் வரவழைத்து சில்க் சுமிதாவுக்கு பிடித்த எலுமிச்சை, புளி, தயிர், பொங்கல், கேசரி சாதம் என 5 விதமான உணவுகளை வழங்கினர்.
மேலும் புதிய ஆடை, மாலை அணிவித்து வளையல்கள் மாட்டி முகத்தில் சந்தனம், குங்குமம் வைத்து வளைகாப்பு நடத்தினர்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇