கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள் இன்று

கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை எம்.ஜி.ஆர் நியமித்தார்.தி.மு.க., ஈ.வி.கே.சம்பத்தின் தமிழ் தேசிய காங்கிரஸ், காங்கிரஸ் என கண்ணதாசன் அரசியல் கட்சிகளில் கொள்கை மாறி, மாறிப் பயணம் செய்தார். அண்ணாவையும் அவர் மனைவி ராணி அம்மையாரையும் தரக்குறைவாக காங்கிரசு மேடையில் பேசியமைக்காகக் கோபமுற்ற காமராசர் அதே மேடையிலேயே கண்ணதாசனை மன்னிப்புக் கேட்கவும் வைத்தார்.வனவாசம் நூலில் கலைஞரை நேரடியாகப் பல இடங்களிலும், கலை ரசிகர் என மறைமுகமாகப் பல இடங்களிலும் தாக்கி எழுதியுள்ளார். கட்சிமாறும் போதெல்லாம் யாரையெல்லாம் புகழ்ந்துதள்ளினாரோ அவர்களையெல்லாம் தரக்குறைவாகப் பழிதூற்றவும் செய்தார்.இருப்பினும் அரசியல் தலைவர்கள் அவரைப் புறந்தள்ளாமல் அவருக்குப் பதவி,சிலை,மண்டபம், பிறந்தநாள் அரசு விழா எனப் போற்றி மதிப்பளித்தனர். அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள் :
  kannadasan   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇