Advertisement
ஆபத்தில் 4 கோடி Play Store யூசர்கள்! இந்த 10 Apps வெச்சுருந்த டெலிட் பண்ணுங்க!

கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) கிடைக்கக் கூடிய 101 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் SpinOk என்னும் ஸ்பைவேர் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ்களை உலகம் முழுவதும் 4 கோடி மக்கள் வைத்துள்ளனர். இவற்றில் 10 ஆப்ஸ் மட்டுமே கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை உடனே டெலிட் (Delete) செய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்ஸ்கள் மூலம் யூசர்களின் (Users) தனிப்பட்ட தகவல்கள் அவர்களுக்கு தெரியமலேயே திருடப்பட வாய்ப்புள்ளது. இந்த ஆப்ஸ் எவை, இவற்றால் என்ன ஆபத்து உள்ளது, எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன்களையும் (Smartphones) மக்களையும் பிரித்து பார்க்க முடியாது.

அதேபோல போன்களில் இருந்து ஆப்களையும் (Apps) பிரித்து பார்க்க முடியாது. பொழுதுபோக்குக்காக விளையாடும் கேம்கள் முதல் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் வங்கி சேவைகள் வரை ஆப் மூலம் கிடைக்கிறது. இவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சைபர் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் தலைத்தூக்கி வருகின்றன.

இதனால் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப்களிலும் சில சைபர் கிரைம் கும்பல்கள் தங்களது கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டன. இதனால் பிளே ஸ்டோரில் இருக்கும் ஆப்களை கண்காணிக்கும் பணியில் பல்வேறு ஆன்டி ஸ்பைவேர் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன.

இந்த நிறுவனங்கள் ஸ்பைவேர் பாதிக்கப்பட்ட ஆப்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம். அந்த வகையில், ரஷ்யாவில் செயல்பட்டுவரும் டாக்டர் வெப் (Doctor Web) ஆன்டி மால்வேர் (Anti-Malware) நிறுவனம், மிகப்பெரும் மால்வேர் பாதிப்பை கண்டறிந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் ஸ்பின்ஓகே (SpinOk) என்னும் ஸ்பைவேர் பரவியிருப்பதாகவும், இதன் மூலம் பல்வறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த 101 ஆப்களில் 10 ஆப்களை மட்டும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வீடியோ எடிட்டிங் முதல் டிரோடிங் வரையில் அந்த ஆப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 10 ஆப்களின் விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். இவற்றிலே ஏதேனும் ஒரு ஆப் உங்களிடம் இருந்தாலும் கூட உடனே டெலிட் செய்துவிடுங்கள்.

  • நாய்ஸ்ஸ் (Noizz) வீடியோ எடிட்டிங் ஆப்,
  • ஜாப்யா (Zapya) பைல் ட்ரான்ஸ்பர் (File Transfer) மற்றும் ஷேர் (Share) ஆப்
  • விஎஃப்லி (VFly) வீடியோ எடிட்டிங் ஆப்
  • எம்விபிட் (MVBit) வீடியோ ஸ்டேட்டஸ் மேக்கர் (Video Status Maker) ஆப்
  • பியூகோ (Biugo) வீடியோ எடிட்டிங் ஆப்
  • கிரேசி டிராப் கேமிங் (Gaming) ஆப்
  • கேஷ்சைன் (Cashzine) இயர்ன் மணி ரிவார்ட் (Earn Money Reward) ஆப்
  • ஃபிஸ்ஸோ நாவல் (Fizzo Novel) புக் ரீடிங் ஆஃப்லைன் (Reading Offline) ஆப்
  • கேஷ்ஈஎம் (CashEM) மணி ரிவார்ட் ஆப்
  • டிக் (Tick) வாட்ச் டூ இயர்ன் (Watch to Earn) ஆப்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“இறுதி மூச்சு வரை என் தொகுதி மக்களுடன் உறவு...” - பாஜகவில் சீட் கிட்டாத வருண் காந்தி உருக்கம்

“இறுதி வரை பில்பித் தொகுதி மக்களோடு இருப்பேன்” என்று அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், வருண் காந்தி மிகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST