Advertisement
ஜடேஜா காலில் விழுந்து ஆசிர்வாதம், பாலிவுட் படத்தை மிஞ்சிய இந்திய கலாச்சார காதல் ஜோடி – ரசிகர்கள் வியப்பு

 

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கடந்த 2 மாதங்களாக பரபரப்பான போட்டிகளுடன் நடைபெற்று வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை 5வது முறையாக வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து பின்னடைவை சந்தித்த அந்த அணி இம்முறை அதிலிருந்து மீண்டெழுந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக கடந்த வருடம் கேப்டன்ஷிப் அழுத்ததால் மோசமாக செயல்பட்டு தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த ரவீந்திர ஜடேஜா இம்முறை மாபெரும் ஃபைனலில் 15* (9) ரன்களை விளாசி ஃபினிஷிங் செய்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

 

கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற லீக் மற்றும் நாக் அவுட் சுற்றின் முடிவில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியன் குஜராத் தங்களுடைய கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் ரிசர்வ் நாளில் நடைபெற்ற ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 214/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 (47) ரன்களும் சஹா 54 (39) ரன்களும் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

காதல் ஜோடி:
அதை தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26, டேவோன் கான்வே 47, சிவம் துபே 32*, ரகானே 27, ராயுடு 19 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்த போதிலும் கடைசி நேரத்தில் மோஹித் சர்மா துல்லியமாகப் பந்து வீசினார். அதனால் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்சரையும் பவுண்டரியும் பறக்க விட்ட ஜடேஜா சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக மோகித் சர்மா 3 விக்கெட் எடுத்தும் குஜராத் கோப்பையை தக்க வைக்கத் தவறியது.

மறுபுறம் அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை போட்டியின் முடிவில் கேப்டன் தோனி தனது இடுப்பில் தூக்கி கட்டிப்பிடித்து உணர்ச்சியுடன் பாராட்டியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதை விட போட்டி முடிந்ததும் களத்திற்குள் ஓடி வந்த ஜடேஜாவின் மனைவி ரவிபா அவரை கட்டிப்பிடிப்பார் என்று பார்த்தால் நேரடியாக காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

குறிப்பாக குஜராத்தில் ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் எம்எல்ஏ என்பதை தாண்டி பல ஆயிரம் ரசிகர்கள் இருந்த மிகப்பெரிய மைதானத்தில் யார் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல் தமது கணவருக்கு மரியாதை கொடுத்து மிகச் சிறந்த இந்திய கலாச்சாரத்தை பின்பற்றும் மனைவியாக நடந்து கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அப்படி தம் மீது அளவு கடந்த மரியாதையும் பாசத்தையும் வைத்திருக்கும் தமது மனைவியை தூக்கிய ஜடேஜாவும் கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். அப்போது இருவரும் சிரித்த முகத்துடன் இருந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் போடாமலேயே கதை எழுதாமலேயே ஐபிஎல் ஃபைனலில் பாலிவுட் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு உண்மையான காதல், பாசம், அன்பு என அனைத்தும் கலந்த தருணத்தை பார்ப்பதாக சமூகவலைதளங்களில் பாராட்டுகின்றனர். அத்துடன் தம்முடைய மகளையும் கட்டிப்பிடித்து ஜடேஜா காற்றில் தூக்கி கொண்டாடியது “கண்ணான கண்ணே” தமிழ் பாடலை பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது.

மேலும் வெற்றி கோப்பையுடன் ஜடேஜா அருகில் நின்ற போதும் தனது தலையில் சேலையை போர்த்திக் கொண்டு அவருடைய மனைவி சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தது இந்திய கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. நாகரிகம் வளர்ந்த இந்த காலத்திலும் நிறைய வீரர்களின் மனைவிகள் சேலையுடன் வருவதற்கே யோசிக்கும் நிலையில் ஜடேஜாவின் மனைவி எம்எல்ஏவாக இருந்தும் இந்தளவுக்கு கலாச்சாரத்தை பின்பற்றுவது உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்துகிறது.

அத்துடன் இறுதியில் ஐபிஎல் கோப்பையை தமது மனைவியிடம் கொடுத்த ஜடேஜா கேப்டன் தோனியுடன் இணைந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “இந்த கோப்பை உங்களுக்காக” என்று தோனிக்கு ஜடேஜா அர்ப்பணித்துள்ளது சென்னை ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST