Chance of moderate rain in Tamil Nadu for 5 days!!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.