Advertisement
அம்பயர்களுடன் விவாதம்! ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இறுதிப் போட்டியில் விளையாட  சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒருமுறை மெதுவாக பந்து வீசியதற்கு நடத்தை நெறிமுறைக்காக அபராதம் தோனிக்கு விதிக்கப்பட்டது. இப்போது மே 28 அன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.  சென்னை அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸை 15 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மைதானமான MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் வீழ்த்தி சாதனை படைத்து 10வது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  GT vs CSK குவாலிஃபையர் 1 மோதலின் போது, ​​தோனி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போட்டியில் நான்கு நிமிட தாமதம் ஏற்பட்டது.  

மதீஷா பத்திரனா டைட்டன்ஸ் அணியின் சேசிங் போது சிறிது நேரம் ஓய்வு எடுக்க சென்றார்.  ஐபிஎல் நிபந்தனைகளின்படி, எட்டு நிமிடங்களுக்கு மேல் மைதானத்தை விட்டு வெளியேறும் எந்த வீரரும், மீண்டும் திரும்பிய பிறகு, அவர் பந்து வீச அனுமதிக்கப்படும் முன்பு அதே அளவு நேரம் மைதானத்தில் இருக்க வேண்டும். ஆனால் பத்திரனா மைதானத்திற்கு திரும்பியதும் பந்து வீச தயாரானார். குஜராத் டைட்டன்ஸ் 30 பந்துகளில் வெற்றி பெற 71 ரன்கள் தேவை என்ற நிலையில், 6 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது.  

ஓவருக்கு முன்பாக நடுவர் அனில் சௌத்ரி பத்திரனாவுடன் உரையாடுவதை தோனி கவனித்தார். பத்திரனா ஒன்பது நிமிடங்களுக்கு மேல் வெளியேறியதாகவும், அவர் பந்துவீச முடியுமா இல்லையா என்பது பற்றிய விவாதம் களத்தில் இருந்தது.  பத்திரன பந்துவீசுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று அம்பயர்களால் தோனிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கடைசி ஓவர் தொடங்கவில்லை என்றால், ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக அபராதம் மற்றும் வட்டத்திற்கு வெளியே நான்கு பேரை மட்டுமே நிறுத்த வேண்டும். இந்த காரசார விவாதங்கள் நடந்து முடிய எட்டு நிமிடங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது, பின்பு பத்திரன பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.  அம்பயர்கள் தோனி மீது குற்றம் சாட்டினால் அவர் பைனல் போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2023 குவாலிஃபையர் 2ல் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் மோத உள்ளது, புதன்கிழமை நடந்த எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை வீழ்த்தியது. மார்கஸ் ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நவீன்-உல்-ஹக்கின் வேகத்தில் சிக்கி 4 விக்கெட்டுகளை அவரிடம் பறி கொடுத்தது.  மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 182/8 ரன்களை எட்டியது. கேமரூன் கிரீன் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர், இருப்பினும், மும்பை அணி சார்பில் ஆகாஷ் மத்வால் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை கைப்பற்றினார்.  

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST