Advertisement
இன்ஸ்டா ராணியின் மெகா மோசடி... ஆசை வார்த்தையில் மோசம் போன தொழிலதிபர்!

இளம்பெண்ணின் ஆசை வார்த்தையில் மோசம் போன தொழிலதிபர், ரூ.20 லட்சம் ஏமாந்த நிலையில் கதறிக் கொண்டிருக்கிறார். தொழிலதிபரிடம் பணம் பறித்த இளம் பெண்ணின் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் ராஜேஷ் (44). இவர் மும்பை செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு லோரேன் மூலமாக அவரது சகோதரி ஹேசல் ஜேம்ஸ், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ராஜேஷ்க்கு நண்பர் ஆனார். அறிமுகத்திற்கு பின்னர் ஹேசல் ஜேம்ஸ்ம், ராஜேஷும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வரும் ஹேசல் ஜேம்ஸ், தான் திருமணம் ஆகாத பெண் என்று கூறி ராஜேஷ் உடன் பழகி வந்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் கணவர் இறந்து விட்டதாகவும் கூறினார். பின்னர் மீண்டும் கணவர் இறக்கவில்லை என்றும் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்

மேலும் தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும் தந்தையுடன் வசித்து வருவதால் தனக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கிறது என தெரிவித்து ரூ.90 ஆயிரம் கடனாக ராஜேஷ் இடமிருந்து பெற்றுள்ளார். தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

 

ஹேசல் ஜேம்ஸ்க்கு உதவ நினைத்த ராஜேஷ், ரூ.20 லட்சம் மதிப்பிலான பணம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி ஹேசலுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து தான் ராஜேஷுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு இருந்தது ராஜேஷுக்கு தெரியவந்தது. மேலும் இதே போல பல ஆண்களிடம் ஹேசல் ஜேம்ஸ் பழகி வந்தது ராஜேஷ்க்கு தெரிய, அவர் அதிர்ந்து போனார். 

இது குறித்து ஹேசல் ஜேம்ஸிடம் கேட்டபோது, ஹேசல் ஜேம்ஸ் ‘என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது’ என்றும் கூறி பேரிடியை கொடுத்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ், ராஜேஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு ஹேசலை தொடர்பு கொண்ட ராஜேஷ், தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

 

அப்போது ஹேசல் ஜேம்ஸ் பணத்தை திருப்பி தர முடியாது என்றும் பணத்தை திருப்பி கேட்டால் தன் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி இருக்கிறார். பயந்து போன ராஜேஷ் மீண்டும் சில நாட்கள் அமைதியாக இருந்து, சில நாட்களுக்கு பிறகு தனது பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ், ‘20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது’ என கூறி மிரட்டி இருக்கிறார்.

 

இதனையடுத்து, கோவைக்கு வந்த ராஜேஷ் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஹேசல் ஜேம்ஸ் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஹேசல் ஜேம்ஸ் பலரிடம் திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து போத்தனூர் போலீசார் மும்பை தொழிலதிபர் ராஜேஷ்-ஐ ஏமாற்றி பழகி பணம் பறித்தது தொடர்பாகவும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் ஹேசல் ஜேம்ஸ் மீது 420, 406, 506 (2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST