Mars of Parutiveeran fame passed away

பருத்திவீரன் புகழ் செவ்வாழை ராசு காலமானார்

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் செவ்வாழை ராசு( வயது 70)  உடல் நலக்குறைவால் காலமானார். கிழக்கு சீமையிலே, மைனா உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் செவ்வாழை ராசு நடித்துள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்திக் இடம் தலையில் கொட்டுவாங்கி நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.