Trichy: Corona causes panic!

திருச்சி: பீதியை கிளப்பும் கொரோனா! தொற்று உறுதி செய்வதற்கு முன்பே ஒருவர் பலி 

திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவை சேர்ந்த உதயகுமார், பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். சுற்றுலா செல்வதற்காக கோவா சென்று உள்ளார். பின்னர் திருச்சியில் உள்ள வீட்டிற்கு திருப்பிய அவருக்கு கடும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த உதயகுமாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதி பாதிப்பு உறுதி செய்வதற்கு முன்பே இன்று காலை உயிரிழந்துள்ளார். பின்னர் மதியத்திற்கு மேல் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.