Advertisement
பிரமாண்டமாக நடைபெற்ற வருண் தேஜ் மற்றும் லாவண்யாவின் நிச்சயதார்த்தம்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் ராதிகா - சரத்குமார், குஷ்பு - சுந்தர் சி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ஆதி - நிக்கி கல்ராணி என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு திரையுலகிலும் ரீல் ஜோடிகள், ரியல் ஜோடிகள் ஆன நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.

அந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைய உள்ள ஜோடி தான் வருண் தேஜ் - லாவண்யா திரிபதி. இவர்கள் இருவரும் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர், நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இதில் வருண் தேஜ் வாரிசு நடிகர் ஆவார். இவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினர் ஆவார். 

சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகபாபுவின் மகன் தான் வருண் தேஜ். இவரும் நடிகை லாவண்யா திரிபதியும் 2 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமாக காதலித்து வந்தனர்.இவர்கள் இருவரைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது வந்தாலும், அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் காத்துவாக்குல கடந்து சென்றது இந்த ஜோடி. 

இதனிடையே அண்மையில் இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து நேற்றைய தினம் [ஜூன் 9-ந் தேதி] ஐதராபாத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்வில் குடும்ப உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST