Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.40 இலட்சம் நன்கொடை

மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை, இன்று (04-10-2021) தலைமை செயலகத்தில், தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் சந்தித்து, கொரோனா நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 40 இலட்சம் வழங்கினார்கள்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இல்லத்திலும், தொகுதியிலும் என்னிடம் வழங்கப்பட்ட ரூ.20,43,702 நிதியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் தலைமைச் செயலகத்தில் இன்று ஒப்படைத்தேன். நிதி அளித்தோருக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

கொரோனா தடுப்புக்காக மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு, மயிலாடுதுறை SVS பள்ளி சார்பில் அதன் நிர்வாகி துரைசாமி அவர்கள் அளித்த ரூ.1 லட்சத்துக்கான காசோலை&பூதனூர் கிருஷ்ணசாமி அவர்கள் அளித்த ரூ.50,000த்துக்கான வரைவோலையை அண்ணன் நிவேதா முருகன் MLA அவர்களிடமிருந்து பெற்றுகொண்டேன் - உதயநிதி ஸ்டாலின்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வீட்டிலும்,தொகுதியிலும், வெளி மாவட்ட சுற்றுப்பயணங்களின் போதும் என்னிடம் வழங்கப்பட்ட ரூ.1,08,49,468- க்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் தலைமை செயலகத்தில் இன்று ஒப்படைத்தேன் - உதயநிதி ஸ்டாலின்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார் பாரிவேந்தர்

திருச்சியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள நவீன ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ரூ.3.20 லட்சம் மதிப்புள்ள 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சொந்த நிதியில் திருச்சியில் ஆட்சியரிடம் ஒப்படைத்தார் பாரிவேந்தர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியது. இதில் தமிழ் திரையுலகின் பல்வேறு சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் திரையுலகை சேர்ந்த பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் என்.ராமசாமி, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். பிறகு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அளித்தார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சேமிப்பு தொகையை கொரோனா நிதிக்கு கொடுத்த சிறுவன் - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சேப்பாக்கம், ராமசாமி கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்த சகோதரர் குருநாதன் - பிரபாவதி அவர்களின் மகன் நித்திஷ் (11) தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். தம்பிக்கு என் அன்பும், பாராட்டும்.

ராயப்பேட்டை,பெருமாள் தெரு பகுதியை சேர்ந்த 115-வது வட்ட துணை அமைப்பாளர் சகோதரர் ராமன்- ஜனனி அவர்களின் மகன் தனுஷ்(9), மகள் தன்யஶ்ரீ(9) ஆகியோர் தங்களின் உண்டியல் சேமிப்பு தொகையை கொரோனா நிவாரண பணிக்கு மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினர். தம்பிக்கு என் அன்பும், பாராட்டும்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனா பணிகளுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி நிவாரண நிதி

கொரோனா நிவாரண பணிகளுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். அதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு மாத ஊதியம் மற்றும் தனது சொந்த பணம் உட்பட ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை பன்வாரிலால் புரோகித் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனா பேரிடர்: நடிகர் சிவகார்த்திகேயன் நிவாரண நிதி

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்கள், வெளிநாடுவாழ் தமிழர்களிடம் தாராளமாக நிதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

அவர் கோரிக்கையை ஏற்று தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை நிதியுதவி வழங்கி வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் கொரோன நிவாரண நிதி அளித்து உதவியுள்ளார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
நடிகர் ஜெயம் ரவி கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

#JUSTIN : நடிகர் ஜெயம் ரவி கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 2 )   NEXT |  LAST