கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) கிடைக்கக் கூடிய 101 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் SpinOk என்னும் ஸ்பைவேர் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ்களை உலகம் முழுவதும் 4 கோடி மக்கள் வைத்துள்ளனர். இவற்றில் 10 ஆப்ஸ் மட்டுமே கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை உடனே டெலிட் (Delete) செய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப்ஸ்கள் மூலம் யூசர்களின் (Users) தனிப்பட்ட தகவல்கள் அவர்களுக்கு தெரியமலேயே திருடப்பட வாய்ப்புள்ளது. இந்த ஆப்ஸ் எவை, இவற்றால் என்ன ஆபத்து உள்ளது, எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன்களையும் (Smartphones) மக்களையும் பிரித்து பார்க்க முடியாது.
அதேபோல போன்களில் இருந்து ஆப்களையும் (Apps) பிரித்து பார்க்க முடியாது. பொழுதுபோக்குக்காக விளையாடும் கேம்கள் முதல் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் வங்கி சேவைகள் வரை ஆப் மூலம் கிடைக்கிறது. இவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சைபர் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் தலைத்தூக்கி வருகின்றன.
இதனால் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப்களிலும் சில சைபர் கிரைம் கும்பல்கள் தங்களது கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டன. இதனால் பிளே ஸ்டோரில் இருக்கும் ஆப்களை கண்காணிக்கும் பணியில் பல்வேறு ஆன்டி ஸ்பைவேர் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன.
இந்த நிறுவனங்கள் ஸ்பைவேர் பாதிக்கப்பட்ட ஆப்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம். அந்த வகையில், ரஷ்யாவில் செயல்பட்டுவரும் டாக்டர் வெப் (Doctor Web) ஆன்டி மால்வேர் (Anti-Malware) நிறுவனம், மிகப்பெரும் மால்வேர் பாதிப்பை கண்டறிந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் ஸ்பின்ஓகே (SpinOk) என்னும் ஸ்பைவேர் பரவியிருப்பதாகவும், இதன் மூலம் பல்வறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த 101 ஆப்களில் 10 ஆப்களை மட்டும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வீடியோ எடிட்டிங் முதல் டிரோடிங் வரையில் அந்த ஆப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 10 ஆப்களின் விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். இவற்றிலே ஏதேனும் ஒரு ஆப் உங்களிடம் இருந்தாலும் கூட உடனே டெலிட் செய்துவிடுங்கள்.